|
கொல்லாம் பழம் கொல்லாம் பழம் Kollam Pazham (Kollam palam) in kanyakumari District இந்தப் பழம் 1990 களின் முற்பகுதியில் குமரி மாவட்டத்தில் நிரம்பி காணப்பட்டது தற்சமயம் கண்ணில் பார்ப்பதே அரிதாக காணப்படுகிறது . இதை சுவைக்காத பெரியவர்கள் இருந்திருக்க மாட்டார்கள் அன்றைய காலகட்டங்களில் இதற்கு பணம் கொடுத்து வாங்க வேண்டிய தேவை இல்லை இதை வீடுகளில் சென்று பறித்து உண்பதற்கும் தடையில்லை இதன் கார சுவையை ரசிப்பதற்காகவே இளைஞர் பட்டாளம் இதை உண்ணும். உண்டபின் தொண்டையில் காணப்படும் கரகரப்பு பேசுவதற்கே சற்று வித்தியாசத்தை காண்பிக்கும். தற்சமயம் சந்தைகளில் அரிதாகவே கிடைக்கிறது நமது இளம் தலைமுறை இதை பார்த்திருக்கவே மாட்டார்கள். இதை விரும்புவோர்களுக்காக நாங்கள் பிரத்தியேகமாக பல சந்தை விற்பனையாளர்களிடம் சொல்லி வைத்துள்ளோம். எத்தனை பணம் கொடுத்தாலும் சில சமயங்களில் கிடைக்காமலே போய்விடுகிறது இதில் சில அற்புதமான மருத்துவ குணங்கள் இருப்பதாகவே சொல்கிறார்கள் வயதானவர்கள். வயிறு பிரச்சனை உள்ளவர்கள் தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் உண்டால் சரியாகிவிடும் என்றும் கூறுகிறார்கள். பெண்களுக்கான சில பிரச்சினைகளையும் தீர்க்கும் என்று சொல்கிறார்கள். இதில் வைட்டமின் சி சத்து உள்ளதால் உடலுக்கு எதிர்ப்பு சக்தி கிடைக்கும் என்றும் சொல்கிறார்கள். இதை பிரத்தேகமாக நமது பயனாளர்களுக்கு நாங்கள் வாங்கி தர இருக்கிறோம் தேவைப்படுபவர்கள் எங்களை உடனே தொடர்பு கொள்ளலாம். இது சந்தைகளில் கிடைக்காத பட்சத்தில் எங்களிடம் புக் செய்தால் நாங்கள் கிடைக்கும்போது உங்களிடம் தெரிவிப்போம். மேலும் இது சம்பந்தமாக விவரங்கள் தேவைப்படுவோர் தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும் |
₹ 250.00 |
Add to Cart |
On Sale |