|
Munthiri Kothu Munthiri Kothu is a unique festival sweet from Kanyakumari District for Christmas தமிழகத்திற்கென்று பாரம்பரிய உணவுப் பண்டங்கள் பல உண்டு. அவ்வகையில் எங்கள் குமரி மண்ணின் பாரம்பரிய உணவுப் பண்டமான “முந்திரிகொத்து” எவ்வாறு செய்வது என்பது குறித்து ஒரு செய்முறை விளக்கம். முந்திரி கொத்து குமரி மக்களின் அனைத்து திருவிழாக்கள் மற்றும் விஷேஷ நாட்களில் தவறாமல் இடம்பெறும் ஒரு பாரம்பரியமிக்க தின்பண்டம்
தேவைப்படும் பொருட்கள் :
சிறுபயறு - 1 கிலோ ( வட மாவட்டங்களில் பச்சைபயறு) கருப்பட்டி - 3/4 கிலோ (ஒரிஜினல் கருப்பட்டியாக இருக்க வேண்டும்.சீனி கலந்திருந்தால் சுவை இருக்காது)
பெரிய தேங்காய் ஒன்று. 10 கிராம் அளவுக்கு ஏலக்காய் ஒரு துண்டு சுக்கு 1/2 கிலோ பச்சரிசி மாவு. சிறுது மஞ்சள் தூள். சிலர் ஒன்றிரண்டு கிராம் நல்லமிளகும் சேர்ப்பதுண்டு. 1 லிட்டர் தேங்காய் எண்ணெய்
சிறுபயிறை நன்றாக வறுத்தெடுக்க வேண்டும். பின்பு அதன் மேல் தோலை நீக்கி பொடியாக்க வேண்டும். தோல் நீக்கிய பயறு கடைகளில் கிடைக்கும். ஆனால் அதில் செய்தால் முந்திரி கொத்தின் சுவை கிடைக்காது. மேல் தோலை நீக்குவதற்கு ’திரியல்’ என்றொரு கருவி உண்டு. அது இல்லாதவர்கள் மிக்ஸி பயன்படுத்தி நீக்கி கொள்ளலாம்.
முக்கால் கிலோ கருப்பட்டியில் 200மில்லி தண்ணீர் கலந்து நன்றாக காய்ச்சி பாகு தயார் செய்து வைத்துக் கொள்ளவும். பாகு நன்றாக ஆற வேண்டும்.
தேங்காயை சாதாரணமாக துருவுவதை விட சிறியதாக துருவி எடுத்து பொன்னிறமாக வறுத்தெடுக்க வேண்டும். ஏலக்காய், சுக்கை பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இவை அனைத்தையும் ஒரு பெரிய பாத்திரத்தில் ஒன்றாக கலக்க வேண்டும். பாத்திரம்,கரண்டி ஈரத்தன்மை இல்லாமல் இருக்க வேண்டும். கரண்டியால் நன்றாக கிளறினால் மாவு உருண்டு வந்து விடும்.பின்பு கையினால் நன்றாக பிசைய வேண்டும். எக்காரணம் கொண்டும் ஈரம் அதில் கலந்து விட கூடாது. அனைத்தும் கலந்த ஒரு பெரிய உருண்டை தயாராகி விடும். பின்பு அதை ஒரு நெல்லிக்காய் அளவிற்கு சிறுசிறு உருண்டைகளாக உருட்ட வேண்டும்.
உருட்டிய உருண்டைகளை சுமார் நான்கு நாட்கள் உலர வைக்க வேண்டும். கருப்பட்டி பாகின் ஈரம் உலரவில்லை எனில் முந்திரி கொத்து விரைவில் கெட்டு விடும். காத்திருக்க விரும்பாவிடில் அடுத்த நாளே கூட செய்யலாம். ஆனால் ஒருநாளாவது உலர வைக்கப்பட வேண்டும். எங்கள் வீட்டில் சுமார் எட்டு நாட்கள் உலர வைப்பார்கள். அதுவரை காத்திருப்பது யார்.... பச்சையாகவே பாதி காலியாகிவிடும்.
பின்னர், பச்சரிசி மாவுடன் சிறுது மஞ்சள் தூளும் கலந்து தோசை மாவு பக்குவத்தில் கலக்கி வைத்துக் கொண்டு, வாணலியில் தேங்காய் எண்ணையை விட்டு, நன்றாக எண்ணெய் காய்ந்ததும், உலர வைக்கப்பட்ட உருண்டைகளை மாவில் நன்றாக நனைத்து எடுத்து வாணலியில் இடவும். நன்றாக வெந்தவுடன் சுவையான “முந்திரி கொத்து” தயார்.
The Packet comes with 1/4 KG, 1/2 KG.Send me the details of the requirement, we undertake party orders too Courier
We partner with all popular couriers in India to deliver the product to next day (ie. In 24 Hrs) for south India. also we have excellent network to deliver the product throughout around the world Keywords Buy munthiri kothu online, buy munthiri kothu-முந்திரிகொத்து from kumarimart, முந்திரிகொத்து -munthiri kothu kanyakumari district buy online |
₹ 55.00 / 1/4 KG |
Add to Cart |
On Sale |